திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன...?

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளில் ஒன்று இரும்புச்சத்து ஆகும். உடலில் இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதுக்கப்படுகின்றனர்.
உடலில் சோர்வு அதிகம் இருந்தால், அதற்கு முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடு ஆகும். இதன் குறைபாட்டினால், ஆக்சிஜன் உடலில் குறைந்து ஆற்றல் குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் சிறு வேலை செய்தால் கூட மிகுந்த சோர்வு ஏற்படும்.
 
மூச்சுவிடுவதில்ல் சிரமம் ஏற்பட்டால், ஒன்று நுரையீரல் பிரச்சனையாக இருக்கும் அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.
 
சாதரணமாக குளிர்காலங்களில் உதடு வெடிப்பது இயல்பானதே. ஆனால் ஒரு சிலருக்கு எப்போதும் உதடு வெடித்தபடியே இருக்கும் இரும்பு சத்து போதாமையின் அறிகுறிதான் இது. இதற்க்கு ஆங்குலார் செய்லிடிஸ் என்று பெயர்.
 
மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அளவுக்கு அதிகம் ஏற்பட்டால், அதற்கு காரணமும் இரும்புச்சத்து குறைபாடு ஆகும்.
 
கடுமையான தலைவலியை பல நாட்களாக இருந்து வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டினால் மூளைக்கு போதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை  என்று அர்த்தம்.