1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்கள் என்ன...?

நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு கால்சியம் மிக முக்கியம். நம்முடைய எலும்புகள் வலுவாக இருக்க இந்த கால்சியம் மிகவும் அவசியமானது. அப்படிப்பட்ட கால்சியத்தை நாம் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. 

நம்முடைய உடலில் கால்சியத்தை உறிய நமக்கு விட்டமின் டி தேவைபடுகிறது. எனவே நமக்கு கால்சியம் எவ்வளவு முக்கியமே அதே போல் விட்டமின் டி சத்தும் மிக முக்கியம்.
 
விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி தான். எனவே நாம் தினமும் காலையில் சூரியஒளி படுமாறு நடக்க வேண்டும். இதனால் நாம் உடற்பயிற்ச்சி செய்தது போலவும் இருக்கும். அதே சமயம் நமக்கு உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்தும் கிடைக்கும். 
 
அதிகாலை சூரியஒளியில் நாம் நடப்பது நம் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் தான் குழந்தைகளை அதிகாலையில் தூக்கி கொண்டு நடைபயணம் செய்வார்கள்.
 
கடல் உயிரினங்களிடம் அதிக அளவு விட்டமின் டி சத்துக்கள் உள்ளது. முக்கியமாக சாலமீனில் அதிகமாக விட்டமின் டி சத்து உள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாலமீனை எடுத்து கொள்வது நம் உடலுக்கு நல்லது. மேலும் இதனால் நம் உடலுக்கும் தேவையான கால்சியமும் கிடைக்கிறது. எனவே நம்முடைய எலும்புகளும் வலிமையாக இருக்கும்.
 
இயற்கையாகவே நமக்கு பாலில் அதிக அளவு விட்டமின் டி சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் இதில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களையும், வைட்டமின் டி சத்துக்களையும் பெற உதவும்.
 
மேலும் பால் சார்ந்த அனைத்து உணவு பொருள்களையும் உட்கொள்வது நல்லது. இதில் அதிக அளவு லாஃக்டோபேசிலஸ் அதிக அளவில் உள்ளது. இது நம்முடைய உடலில் விட்டமின் டி சத்துக்களை அதிக அளவில் உறிஞ்சு கொள்ள உதவுகிறது.
 
இந்த மீன் எண்ணெய்யில் அதிக அளவு விட்டமின் டி சத்தும், விட்டமின் ஏ சத்தும் உள்ளது. இது நம் குழந்தைகளுக்கு விட்டமின் குறைபாட்டால் ஏற்பட கூடிய நோயான ரிக்கட்டஸ் வர விடாமல் பார்த்து கொள்ளும். எனவே அடிக்கடி இந்த மீன் எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது.