வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (16:58 IST)

உடல் எடையை குறைக்க என்ன உணவு முறைகளை பின்பற்றவேண்டும்....?

Weight Gain
அன்றாடம் எடுத்து கொள்ளும் கீரைகள் தனிப்பட்ட முறையில் நம்முடைய உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை கஷ்டப்படுபவர்கள் தினமும் உணவில் ஒரு கீரையாவது எடுத்து கொள்வது நல்லது.


அதிகாலை நேரத்தில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று தின்றால் உடல் எடை குறையும். இது மட்டுமல்லாமல் உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். அதனுடன் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும்.

ஓமவள்ளி இலையை சாப்பிடும்போது நம் உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இருக்கிறது. இதனால், ரத்த சர்க்கரை கட்டுப்படும். அதே சமயம், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

பார்ஸ்லே கீரையை எடுத்துக் கொண்டால் உடல் எடையை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும். இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் செரிமானப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

கொத்தமல்லி இலையில் மெக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளிட்டவை நிரம்பியுள்ளது. உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் அற்புதமான மாற்றங்களை தரக் கூடியது.

காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.காலையில் அதிகம் உண்டு நடப்பது,அன்றைய நாள் முழுவதும் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

இரவு உணவில் வயிறு முட்ட உண்ணாதீர்கள். அரை வயிறு உணவும்,கால் வயிறு தண்ணீரும்,கால் வயிறு வெற்றிடமாகவும் இருக்கட்டும். உணவு உண்டபின் உறங்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்தே படுக்கச் செல்லுங்கள்.

காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வயிறு ஓரளவிற்கு நிறைந்து விட்டது போல் தோன்றினால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.