1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. What are the vegetables that Help Reduce Obesity...?

உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறிகள் என்ன...?

உடல் பருமன்
உடல் பருமன் உண்டாகாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், சாப்பிடும் உணவை சரியான அளவில் சரியான நேரத்தில் சரிவிகித அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக கலோரி கொண்ட உணவுகள், எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் உடல் பருமன்  ஏற்படாமல் தடுக்கலாம்.
 
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும்,  கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள்  வைக்கலாம்.
 
பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக்  குறைக்கபெரிதும் உதவுகிறது.
 
பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
 
வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
 
கேரட் கண்களுக்கு நல்லது. அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைப்பதில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி உடல் எடையை குறைத்திடவும் அழகான சருமத்தை பெறவும் பெரிதும் உதவுகிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன...?