வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 29 ஜனவரி 2022 (18:30 IST)

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ பயன்கள் என்ன...?

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ பயன்கள் என்ன...?
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தான் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்பவர்கள் சாத்துக்குடி பழத்தை வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது.


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜுஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமடையும்.

உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸினை அடிக்கடி எடுத்துக்கொண்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்வுடன் காணப்படும்.

நீர்க்கடுப்பு பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடி பழத்தினை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு சரியாகிவிடும்.     உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய அடிக்கடி சாத்துக்குடி பழ சாற்றினை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நன்மை தரும்.

மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது.  சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிடுவதால் முகம் பொலிவடைந்து முகம் பளிச்சிடும்.

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது. சாத்துக்குடி ஜீரண சக்தியை அதிகரித்து, பசி உணர்வை தூண்டுகிறது.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது. சாத்துக்குடிப் பழச்சாற்றைத் தலையில் தேய்த்து குளித்துவந்தால் மென்மையானக் கூந்தலைப் பெறமுடியும்.