1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (17:54 IST)

சில கட்டாயம் தவிர்க்கவேண்டிய ஆன்மிக குறிப்புகள் என்ன தெரியுமா...?

செவ்வாய், மற்றும் புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.


ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.

சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது தவறு.

அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

இறந்த முன்னோர்களின் படங்களை, சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.  பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

கோயிலுக்குள் செல்லும் போது, கோயில் வாசலில் பிச்சை கேட்பவர்களுக்கு தானம் செய்து விட்டுப் போக வேண்டும். அதாவது அந்த தானம் செய்த தர்ம பலனுடன் தான் இறைவனின் சன்னதியை அடைய வேண்டும். கோயிலில் சென்று இறைவனை தரிசித்து விட்டு வறியவர்களுக்கு தானம் செய்வது நல்ல பலனை அளிக்காது.

இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும். சுப காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது, பேசினால் சுபம் தடைபடும்.

வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது நாம் அணைக்கக் கூடாது. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியே தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.