செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:37 IST)

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!

உணவு வகையிலும், மருத்துவத்திலும் பல்வேறு பயன்களை தரவல்லது கேரட். மலைப்பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சார்ந்த கேரட் ஒரு மினி டாக்டர் என்றே சொல்லலாம்.

உடலுக்கு குளிர்ச்சியை வழங்க கூடியவற்றில் கேரட் முதன்மையானது. தினமும் காலை எழுந்ததும் சுத்தமான தண்ணீரில் ஒரு முழு கேரட்டை கழுவி விட்டு சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறையும். கத்தியால் வெட்டாமல் கடித்து சாப்பிடுவது நல்லது.

கேரட்டில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. கோடைக்காலங்களில் வெளியே செல்லும்போது அதிகமான வெயில் கண்களையும், தோலையும் பாதிக்காமல் தடுக்க தினமும் கேரட்டை தோலை சீவி சாப்பிடலாம். சீவிய தோலை அரைத்து உடலில் தடவினால் வெயிலால் ஏற்படும் வேர்குரு, சிவப்பு தன்மை நீங்கும்.

தினம் பணிகளுக்கு சென்றுவிட்டு சோர்வாக வீடு திரும்பினாலோ அல்லது வீட்டுவேலைகளை முடித்து சோர்வாக இருந்தாலோ கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடல் சோர்வு உடனடியாக நீங்கும்.

நாள்பட்ட வயிற்று புண் குணமாக கேரட் துருவலுடன் உப்பில்லாத தயிர் சேர்த்து தினமும் காலை சாப்பிடலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், வயிற்று புண்ணையும் விரைவில் ஆற்றும்.

தினமும் காலையில் கேரட்டை நறுக்கி சிறிது உப்பு தூவி சாலட் போல செய்து சாப்பிடலாம். கேரட் ரத்தத்ததை சுத்தப்படுத்தும்.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வருவதால் தோல் சுருக்கங்கள் மெல்ல நீங்கி உடல் பொலிவு பெறும்.

காலை நேரங்களில் சர்க்கரை சேர்க்காமல் அரை ட்ம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் வயிற்று புழுக்கள் வெளியேறி, வயிறு சுத்தமாகும்.