1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கோடைக்காலத்தில் அத்தியாவசிய சத்துக்கள் நிறைவாக தரும் உணவுகள் என்ன?

சாதாரண குளிர்பானங்களை விட நமது பாரம்பரிய உணவில் உள்ள புத்துணர்ச்சி மற்றும் சக்தி  ஊட்டக்கூடிய ஆரோக்கியமான குளிர்பானங்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மசாலா மோர்: தயிர், தண்ணீர் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து மண்பானையில் நன்றாக கலந்து நுரையுடன் பரிமாறப்படும் சுவையான பானமாகும். இவை தாகத்தை தீர்ப்பதோடு ஜீரணத்திற்கு சிறந்ததாகும்.
 
வெயில் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இந்த மசாலா மோர் கொடுத்து உபசரிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
 
லஸ்ஸி: இது தயிருடன் சர்க்கரை, தண்ணீர், சில நறுமணப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன்  உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைவாக உள்ளன.
 
கோடைக்காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்க்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
எலுமிச்சை நீர்: எளிதாக செய்யக்கூடிய புத்துணர்ச்சி தரும் பானம் எலுமிச்சை நீராகும். இவை வைட்டமின் சி, பி மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த பானமாகும்.
 
சீரகம் கலந்த நீர்: சீரகம் மற்றும் நீர் கலந்த பானம் குளிர்ச்சி தன்மைக்காக புகழ் பெற்றது. இது பசியை தூண்டக்கூடியதாகும். இது புளிப்பு மற்றும் கார  சுவையுடையதாகும். இதில் மிளகு, புதினா மற்றும் சீரகம் சேர்க்கப்படும்.
 
மசாலா பால்: மசாலா பால் உடலுக்கு நல்லது. இது மாலை நேரங்களில் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாக அருந்தக்கூடிய பானமாக இருக்கிறது. மசாலா பாலில் இஞ்சி, பட்டை, ஏலக்காய், மஞ்சள் தூள், மற்றும் கிராம்பு சேர்ப்பதனால் உடலிற்கு மிகவும் நல்லது.
 
கரும்புச்சாறு: கரும்புச்சாறுக்கு கோடைக்காலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இவற்றை அருந்தினால் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.