திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (18:27 IST)

கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்...!!

கற்றாழையில் பல வகைகள் உண்டு. அவைகள் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை,  பேய் கற்றாழை, கருங் கற்றாழை, ரயில் கற்றாழை என்பதாகும். இதில் சோற்றுக்கற்றாழை மற்றும் சிறு கற்றாழை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.


முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் மிருதுவாக இருக்கும் என்பதை ஆராய்ச்சிகள் மூலமும் நிருபித்துள்ளனர்.

கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் வழியும் முகத்தை தடுக்கவும் இந்த கற்றாழை பயன்படுகிறது.

காற்றாழையில் இருந்து நேரடியாக அதன் ஜெல்லை எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல்லையும் வாங்கி பயன்படுத்தலாம்.

கற்றாழை வெட்டி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை போட்டு பிரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். பின்னர் அதை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

கற்றாழையின் ஜெல் உங்களது முகத் தோலில் படிந்துள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச் செய்யும். மேலும், முகப்பருக்களை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டுள்ளது.