செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (10:11 IST)

உலர் திராட்சையை தவறாமல் எடுத்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

Dry grapes
உலர்திராட்சையில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக இது வயிற்றில் ஒரு மலமிளக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மலச்சிக்கலை போக்கவும், மற்றும் சீரான குடல் இயக்கத்தை பராமரிக்கவும், உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றவும் உதவுகிறது.


உலர்திராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் நச்சு திரவங்களை அகற்ற உதவுகிறது. அவை உடலில் உள்ள pH அளவை சமப்படுத்த உதவுகின்றன, இது இரத்த நச்சுத்தன்மை மற்றும் பல்வேறு உள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆபத்தான வாயுக்களை குறைக்க உதவுகிறது.

உலர் திராட்சைகளில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுகள், மாசுக்கள் மற்றும் பிற அசுத்தங்களை சுத்தப்படுத்த உதவுகிறது. உலர்திராட்சையில் கனிசமான அளவு இரும்பு சத்து உள்ளது. எனவே தினமும் உலர் திராட்சை உட்கொள்வதன் மூலம் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு கருப்பு திராட்சைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. உலர் திராட்சைகளில் பாலிபினால்கள் உள்ளன. அவை நல்ல கொழுப்பு அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

உலர்திராட்சைகள் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்தவை மேலும் அதிக கலோரிகள் உட்கொள்ளலில் சேர்க்காமல் உடல் பசியைக் கட்டுப்படுத்த உதவும் தன்மையுடையது. இதன் மூலம் நீண்ட நேரம் பசியைக் குறைத்து உடல் எடை குறைப்பதில் உதவுகிறது. திராட்சையில் உள்ள இயற்கையான பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிக அளவு ஆற்றலை வழங்க உதவுகிறது. மிதமான அளவில் சாப்பிட்டால், அவை பலவீனம் மற்றும் எடை அதிகரிப்பைத் தடுக்க உதவுகின்றன.

முடி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தினமும் ஊறவைத்த உலர் திராட்சையை தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் சி முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது. கூந்தல் பளபளப்பாகவும், வலிமையாகவும் இருக்க அவசிமான ஊட்டசத்தை அளிக்கிறது. மேலும் முடி அடர்த்தியாகி, பொடுகு தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.