நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் புண்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
காலில் புண்கள் ஏற்படுவது மற்றவர்களையும் விட நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம். அத்துடன் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. குருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில்புண்கள் ஏற்படுகி்ன்றன.
இரத்த ஓட்டக் குறைபாட்டினால் அவை குணமடைவதும் சிரமம். சிலவேளைகளில் விரல்களையும் கால்களையும் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது. மற்றொரு காரணம் நரம்புகளின் பாதிப்பால் நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் உணர்ச்சி குறைவு என்பதால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. உணர்வு குறைவு என்பதால் புண்கள் பெரிதாகும் வரை தெரிவதும் இல்லை.
குருதியில் கொலஸ்டரோல் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
காலுக்கு பொருத்தமான காலணிகளையும் சாக்ஸ்களையும் அணியவும். காலணிகள் அணியாது வீட்டு முற்றம், வீதி, காணி எங்கும் காலெடுத்து வைக்காதீர்கள். தினமும் பாதங்களை ஒழுங்காக கவனிக்கவேண்டும். உரசல்கள், காயங்கள், நிறமாற்றங்கள், வலி, போல அவதானித்தால் உடனடியாக மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
நகம் வெட்டும்போது ஓரங்களை வளைத்து வெட்டாது, நேராகவும், அருகில் உள்ள சருமத்தைவெட்டாதபடியும் மிகுந்த அவதானம் தேவை. குளித்த பின் நகங்கள் மிருதுவாக இருக்கும் நேரத்தில் வெட்ட வேண்டும். கால்களை முகத்தை பராமரிப்பது போல பாதத்தை பராமரிக்க வேண்டும்.