வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 2 மே 2022 (15:17 IST)

பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதால் என்ன பயன்கள்...?

Dates Fruit
சில உணவு வகைகளை மற்றொரு உணவுடன் சேர்த்து உண்டால் அது பல அற்புத நன்மைகளை நமக்குத் தரும் என்பது எல்லோரும் அறிந்ததே.


பசும் பாலுடன், பேரீச்சம் பழத்தை சேர்த்து உட்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

இரும்புச் சத்து பேரிச்சையில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு இன்றியமையாதது. இரத்த சோகை தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பேரிச்சை உதவுகிறது.

பசும் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கின்றன.

பேரிச்சம் பழம் மற்றும் பால் கலவையை தவறாமல் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான ரத்தத்தை உருவாக்க வலி வகை செய்யும் என்று இது குறித்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழம் சருமத்திற்கு சிறந்தது. முக சுருக்கத்தை நீக்க விரும்புவோர் உலர்ந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், இது நேரெதிராக வேலை செய்யும். பாலில் ஊற வைத்த பேரிச்சையுடன் தேன் கலந்து, அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் பேக் போல இட்டுக் கொண்டு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.

வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்பேக் செய்து போட்டுக் கொண்டால் முக சுருக்கம் நீங்கி இளமையாக  காட்சியளிப்பீர்கள்.

பாலில் ஊற வைத்த பேரிச்சை ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அடர்த்தியான உணவாக செயல்பட்டு உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். பேரிட்சையை பாலில் மட்டும் ஊற வைப்பது ஏன்? பேரிட்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

பாலில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலையும், பலத்தையும் வழங்கும்.தினமும் காலையில் உணவுக்கு முன் வெறும் வயிற்றில் இந்த பேரிட்சை மற்றும் பால் கலந்த இந்த பானத்தைக் குடிக்கவும்.