1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:25 IST)

அன்றாட உணவில் முருங்கைக்காய் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள் !!

Drumstick
முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை.


முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக்காயை பக்குவம் செய்து தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது. நுரையீரலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது.

முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் உறுதியடைவதோடு எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

Edited by Sasikala