1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

காராமணியில் காணப்படும் நார்ச்சத்தின் பயன்கள் என்ன...?

வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் துளைகள் இல்லாத உடையாத பயறுகளைத் வாங்க வேண்டும். காராமணியானது சூப்புகள், சாலட்டுகள், கேக்குகள், இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

காராமணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம்  ஆகியவையும் உள்ளன. பயோசனின் என்ற பைட்டோ நியூட்ரியன் காணப்படுகிறது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும்  அதிகமாக உள்ளன.
 
மேலும் இதில் விட்டமின் பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுகள்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி3(நியாசின்), பி2 (ரிபோஃப்ளோவின்), ஆகிய  சத்துக்கள் அதிகம் உள்ளன.
 
காராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும்  ஏற்படாமல் தடுக்கிறது.
 
காராமணியில் காணப்படும் விட்டமின் பி1 (தயாமின்) இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. 
 
காராமணியில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.