தேனுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை பயன்களா....!!
வறட்டு இருமல் பிரச்சனை வராமல் இருக்க, சிறிதளவு இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
1 வயது கடந்த குழந்தைகளுக்கு தினமும் 1 ஸ்பூன் தேன் கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். மாதுளம் பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து விடும்.
பூண்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த கொதிப்பு சரியாகும். தேனில் பாக்டிரியாவை அளிக்க கூடிய சக்தி இருப்பதால் தீக்காயங்கள், வெட்டு காயங்கள் போன்ற புண்களுக்கு சிறந்த மருந்தாக தனி இடம் வகிக்கிறது.
மினரல், துத்தநாகம், தாமிரம் , அயோடின் போன்ற சத்துக்கள் தேனில் உள்ளதால் இருதய நோயாளிகளுக்கு சிறந்த மருந்து ஆகும். தேன் தினமும் நாம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.
இரத்த சோகை உள்ளவர்கள் தேன் தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர இரத்த சோகை குறையும். தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை நோய் அடியோடு தீர்ந்து விடும்.
கண் நோய்களுக்கு, தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து தேன் ஆகும். தூக்கமின்மை பிரச்சனைக்கு தேன் ஒரு அற்புத மருந்தாக கருதப்படுகிறது.