திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (13:00 IST)

அடிக்கடி உணவில் வாழைக்காய் சாப்பிடுவது நல்லதா...?

Vazhakkai
வாழைக்காயைச் சாப்பிட்டால் வாயுஎன்பார்கள். இது இளைஞர்களை ஒன்றும் செய்யாது. இதனால் ஏற்படுகின்ற வாயு பெரிய தொல்லை தராது. இருப்பினும் அளவோடு பயன்படுத்தினால் எந்த தொந்தரவும் ஏற்படாது.


வாழைக்காய் வயிற்றுப் புண்ணை ஆற்றும். குடல் எரிச்சலுக்கும், இரத்தக் கடுப்பிற்கும் நன்மை தரும். மற்றும் வாந்திபேதி, பித்தம், வயிற்றுப் பொருமல், அனல் காசம், வாய்குழறல் போன்றவற்றை நீக்கும் ஆற்றல் வாழைக்காயிக்கு உண்டு.

வாழைக்காய் வறுவலில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பெருங்காயம் கலந்து சமைத்து உண்வுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படாது.

வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க அதிகம் வாழைக்காய் சாப்பிட வேண்டும்.

வாழைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பேருதவி புரிகிறது.