1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (10:34 IST)

அடிக்கடி சோயா பீன்ஸ் சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?

Soybeans
தாவர உணவுகளில் அசைவத்திற்கு இணையான அதிக புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா. எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும்.


சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

சோயாவிலிருந்து பெறப்படுகிற ப்ரோபயாட்டிக் தயிரில் உள்ள ஈஸ்ட், செரிமானத்துக்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா பீன்ஸினை எடுத்துக் கொள்வது அவசியம்.

ஐசோபிலோமோன் என்பதே பைட்டோ ஈஸ்ட்ரோஜனின் ஒரு வகை. இது சோயாவில் புரதம் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

சோயா பீன்ஸ்களில் உள்ள ‘ஐசோஃப்ளேவோன்கள்’ நீரழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் அடிக்கடி சோயா பீன்ஸ் சாப்பிடலாம்.