1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (10:20 IST)

பருப்புக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் !!

Paruppu Keerai
பருப்புகீரையில் ஒமேகா 3, வைட்டமின் பி, கரோட்டீனும் அதிகமாக இருப்பதால் கண் பார்வை திறனை இது பாதுகாக்கிறது. குறைந்தது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு வேளைகளாவது பருப்புக் கீரை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


பருப்புகீரை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் ஒமேகா 3 எனும் அமிலம் இருக்கிறது. மேலும், இதனை கோழிக் கீரை என்றும் சொல்லப்படும்.

பருப்புக் கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் குடல் புழுக்கள் அழியும். மலச்சிக்கல் நீங்கும். குடல் சுத்தமாகும். ஒல்லியானவர்கள் சதை போடுவார்கள். அதிகம் சதை போடாமல் இருக்க சிறிது தயிர் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

பருப்புக் கீரை மசியலுடன், நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர, வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும்.

வாரம் மூன்று அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரலை சிறப்பாக இயங்க வைத்து ரத்ததை சுத்தப்படுத்துகிறது. மேலும், தோலிற்கு பளபளப்பான தோற்றத்தை தருகிறது.

இக்கீரையில் பொட்டாசியம், சோடியம் இருப்பதால் ரத்தக் கொதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்றவைகள் ஏற்படாது.

பருப்புக்கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம், தக்காளி, மிளகு, பூண்டு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் மெலியும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள். பித்தப் பையில் கல் உள்ளவர்கள் உண்ணக்கூடாது. கபதேகிகள் இக்கீரையை குறைந்த அளவில் உண்டால் நல்லது. அதுவும் மிளகு அதிக அளவு சேர்த்து உண்பது நல்லது.