கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்?

Guava
Sasikala|
கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு  தீர்ந்து விடும்.

உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பினை கரைத்து கொழுப்பினால் ஏற்படும் உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.
 
கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் அதன் வீரியம் குறைந்து நோய் தாக்கமும் குறையும்.
 
கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து  வயதிறனாரும் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் கொய்யா பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். கொய்யா பழத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான “போலிக் ஆசிட்”  நிறைந்திருப்பதால் தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் அதிக நன்மையை தரும்.
 
அஜீரண கோளாறினால் பாதிப்படைந்தவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர எளிதில் ஜீரண சக்தி ஏற்பட்டு வயிற்று உப்பசம் போன்றவை ஏற்படாமல் சரி  செய்யும்.


இதில் மேலும் படிக்கவும் :