புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பூண்டு பற்களை எந்த முறையில் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் !!

வாயுத்தொல்லைகளை நீக்குவதில், பூண்டு மிகவும் சிறந்தது. தினசரி ஒரு பூண்டை, தீயில் சுட்டு, மென்று வந்தால் வாயுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.
ரத்தத்தை சுத்தப்படுத்தி, புற்று நோய் மாதிரியான கொடிய நோய்களை, நம்மிடம் அண்ட விடாமல் தடுக்க செய்கிறது. இதயத்தில் சேரும் கொழுப்புகளை, பூண்டு  கரைக்க செய்கிறது.
 
முகப்பரு இருக்கும் இடத்தில பூண்டு சாறை தடவி வந்தால் பருக்கள் உடனே மறைந்துவிடும். நல்லெண்ணெய்யில் 10 பல் பூண்டை சேர்த்து, சுண்ட காய்ச்சி ஆற  வாய்த்த பின்பு, அந்த எண்ணெய்யை சிறிதளவு காதுகளில் விட்டால், காது வலி குணமடையும்.
 
வாயுக்கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளைப்பூண்டு, மிளகு, பனைவெல்லம் சேர்த்து தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும். பூண்டு பற்களை பசும்பாலில் போட்டு வேகவைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
 
மார்புச் சளியால் அவதிப்படுபவர்களுக்கு பூண்டு நல்ல மருந்தாக பயன்படுகிறது. மூன்று வெள்ளைப்பூண்டு, கால் ஸ்பூன் கடுகு இரண்டையும் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி அதனை வடிகட்டி நெஞ்சுப் பகுதியில் தடவி வந்தால் மார்புச்சளி நீங்கும்.
 
3 மிளகு, சிறிதளவு ஓமம், 2 பூண்டு இவைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து உடல் பருமன் குறையும்.
 
பூண்டை பச்சையாக சாப்பிட்டால் தலைவலி உண்டாகும். எனவே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக பூண்டு சேர்த்துக்கொண்டால் சருமத்தில் அரிப்பு அல்லது தடிப்பு உருவாகும்.