செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அடிக்கடி தேங்காய் பூவை சாப்பிடுவதினால் என்ன நன்மைகள்...?

தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி தேங்காய் பூவை சாப்பிடுவதினால், ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்கிறது.

இதயக் குழாய்களில் படிக்கின்ற கொழுப்பு மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இது கொழுப்பு தேங்கும்  பிரச்சினையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காயைப் பூ செயல்படும்.
 
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய்ப் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும். இந்த தேங்காய்ப் பூவில் உள்ள மினரல்களும், விட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.
 
தேங்காய்ப்பூ, சிறுநீரில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. தொற்றுநோய்களைக் குணப்படுத்தும். கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்து  பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது.
 
உடல் எடையை கட்டுக்குள் வைக்க தேங்காய்ப்பூ உதவுகிறது. தேங்காய்ப்பூவில் உள்ள கலோரியின் அளவு மிக மிக குறைவு. இதனால் எடை கூடாது.
 
தேங்காய்ப்பூ உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாக குறைக்க உதவுகிறது.
 
சருமத்தை மிக இளமையாகவும், பொலிவுடனும், சுருக்கங்கள் இல்லாமலும் வைத்திருப்பதிலும் தேங்காய்ப்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆன்டி  ஆக்சிடன்ட் இளமையை தக்க வைத்துக் கொள்ளுகிறது.