செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும்...?

ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும்.

ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதாகவும், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது.
 
ப்ராக்கோலி புற்றுநோய் பாதுகாப்பு காரணியாக உள்ளது, இதன் தன்மையானது புற்றுநோயினை வராமல் பாதுகாப்பதாகவும் உள்ளது. ப்ராக்கோலி இரத்தத்தில் உள்ள  சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாக உள்ளது.
 
ப்ரோக்கோலி வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையினைப் போல் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் 8 மாதக் குழந்தை முதல் முதியோர்  வரை அனைவரும் இதனை வாரத்தில் 2 முறையாவது எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.
 
எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட காரணமாகிறது.
 
ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல்  பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.