புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

என்னது கொய்யா இலையில் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா...!!

கொய்யா இலை டீயை தினமும் இரண்டு முறை குடித்து வாருவதால், ரத்தத்தின் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். கார்போஹைட்ரேட் ஏற்படும் தாக்கத்தினயும் குறைத்து கொலஸ்ட்ராலை எரித்து, எடையைக் குறைக்கும்.

வயிற்று போக்கு உடையவர்கள் 30 கிராம் கொய்யா இலைகளை ஒரு கைப்பிடிளவு அரிசி மாவுடன், ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வாருங்கள். வயிற்றுப் போக்கு குறைந்து விடும்.
 
கொய்யா செடியின் வேர்கள் மற்றும் இலைகளை வெட்டி 90 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி  குடித்தால் சீதபேதி சரியாகி விடும். இவை வயிற்றில் இருக்கும் நொதிகளை சரி செய்து செரிமான பிரச்சனைகளை சரி செய்து விடுகிறது.
 
கொய்யா இலை டீயை 10 வாரங்கள் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும். வயிற்று வலி வந்தால் 6 கொய்யா இலைகளை 1.5 லிட்டர்  நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வாருங்கள். வலி படிப்படியாக குறைந்து விடும்.
 
8 கொய்யா இலைகளை 5 கப் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை சூடுபடுத்த வேண்டும். ஆறிய பிறகு வடிகட்டி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு நாளைக்கு 3 வேளை கொடுத்து வாருங்கள் அறிகுறிகள் குறையும்.
 
கொய்யா இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் அப்ளே செய்து வாருங்கள். இதன் ஆன்டி செப்டிக் தன்மை முகப்பருவிற்கு காரணமான பாக்டீரியாக்களை கொல்கிறது.
 
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 முதல் 30 கொய்யா இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறவிடுங்கள். நன்கு ஆறிய பிறகு அந்த நீரை ஒரு ஸ்பிரே  பாட்டிலில் தலைமுடி மற்றும் வேர்க்கால்களில் படும்படியாக ஸ்பிரே செய்யலாம். அல்லது நேரடியாக தலையை அலசப் பயன்படுத்துங்கள். இது வேர்க்கால்களைத் தூண்டி, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
 
ஆண்கள் தங்கள் விந்தணுக்கள் உற்பத்தியை பெருக்க கொய்யா இலைகளை டீ போட்டு குடிக்கலாம். இது விந்தணு உற்பத்தியை பெருக்கி சீக்கிரமே கருத்தரிக்க  உதவுகிறது.