செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இளநரை ஏற்படுவதை தடுப்பதற்கான வழிகள்...!!

தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம்.


வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும்.
 
* வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.
 
* மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக  வளரும்.
 
* மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கறுப்பாகும்.
 
* ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்.
 
* கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்திப்பூ, திரிபலா சூரணம் இவற்றை  அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.