1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (14:28 IST)

இயற்கையான முறையில் வயிற்றை சுத்தம் செய்ய உதவும் வழிகள் !!

Natural Remedies
எண் சாண் உடம்புக்கு வயிறே முதன்மை என்பதால் வயிறை சுத்தமாக வைத்திருந்தால் நோய் நொடியின்றி வாழலாம்.


வயிறு சுத்தம் செய்ய நாட்டு மருந்து கடையில் அல்லது சித்தமருத்துவரை அனுகி பேதிக்கு மாத்திரை வாங்கி அதனை விடுமுறை நாளில் காவையில் சித்தமருத்துவரின் ஆலோசனையில் உட்கொள்ளவும்.

சுத்தமான மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய், நம் வயிற்றை அதிக அளவுக்கு சுத்தம் செய்யும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த ஆமணக்கு எண்ணெய்யைத் தான் பயன்படுத்துவார்கள். இது உடனடியாக மலச்சிக்கலைத் தீர்த்து நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளித்தள்ளி விடும். இந்த கலவையோடு அரை ஸ்பூனுக்கு உப்பும் சேர்த்துக்கலாம். பாதி எலுமிச்சையையும் இதனோடு சேர்க்க வேண்டும். இதனால் சளித்தொல்லையும் வராது.

வாரம் ஒருமுறை எடுத்துக்கலாம். இதை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதற்கு முன்பு சாதாரண பச்சைத் தண்ணீர் அரை கிளாஸ் குடித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதைக் குடிக்க வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை குடித்தாலே நம் வயிறு சுத்தம் ஆக ஆரம்பிக்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நில ஆவாரை பொடி இரவில் ஒரு டம்ளர் வெந்நீரில். ஒரு ஸ்பூன் நில ஆவாரை பொடி கலந்து எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டால் பத்து மணிக்கு குடிங்க காலை ஏழு மணிக்கு வயிறு சுத்தமாகி விடும் இன்னொரு மருந்து காலை எலுமிச்சை சாறு உப்பு கலந்து தண்ணீர் ஒரு லிட்டர் சேர்த்து கொதிக்க வைத்து கொஞ்சமாக குடித்து வந்தால் வயிறு சுத்தமாகி விடும்.

Edited by Sasikala