ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளதா கத்தரிக்காய்...?
கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கத்தரிக்காயில் உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன.
கத்தரிக்காயை பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை ஒளிர வைக்கிறது.
கத்திரிக்காய் நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட நன்மை தரக்கூடிய கத்தரிக்காயை பலரும் உணவில் சேர்த்து கொள்வதில்லை. அனால் கத்திரிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
கத்தரிக்கையை தினமும் சாப்பிட்டு வந்தால் முடியின் வேர்கால்கள் வலுப்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும். கத்தரிக்காயில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலம் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும்.
Edited ny Sasikala