1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (12:30 IST)

சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க வேண்டுமா....?

Fruits
சருமத்தின் பொலிவிற்குத் தேவையான வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் சத்தான கொழுப்புகள் நிறைந்த அவகேடோ பழங்கள், ஆலிவ் எண்ணெய், ஆளி விதைகள், நட்ஸ் பிறும் மீன் உள்ளிட்ட உணவுகள் நல்லது. அது உங்கள் மேனியை இளமையாகக் காட்டும்.


முகப்பரு உள்ளவர்களுக்கு பப்பாளி நல்ல தீர்வை தரும். பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதாக நீக்கிவிடும். பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்த பிறகு கழுவி வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஆப்ரிக்காட் சிறந்த பலனை தரும். இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்து அதில் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகள் தரும். ஜூஸ் போட்ட பிறகு ஆரஞ்சு தோலை தூக்கி போட வேண்டாம். அதன் தோலை முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து கழுவினால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

அதிக சத்துக்களை கொண்டுள்ள மாதுளை சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க தினமும் மாதுளை பழச்சாறு எடுத்துக் கொள்வது நல்லது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிளை மசித்து சிறிது தேன் கலந்து முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.