1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (18:26 IST)

மக்காச்சோளத்தில் உள்ள வைட்டமின்களும் அதன் நன்மைகளும் !!

மக்காச்சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக டயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.


சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

சோளத்தில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உடலில் நாசின் சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றது.

மக்கா சோளம் தொடர்ந்து தயாமின் மற்றும் நியாசின் சத்துக்கள் கிடைக்கப்பெற்று, மேற்கூறிய குறைபாடுகள் நீங்கி உடலை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

மக்கா சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இதனால், மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டது. இது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் வராமல் உதவி புரிகிறது.

மக்காசோளம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் மக்காசோளத்தில் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.