1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Vitamins in Beans and Amazing Medicinal Benefits !!

பீன்ஸில் உள்ள வைட்டமின்களும் அற்புத மருத்துவ பயன்களும் !!

பீன்ஸ்
பீன்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் உள்ளது.


கனிமச் சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனி‌ஷ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது  உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை‌த் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதய ஆரோகியத்திற்கும்  சிறந்தது.

மற்ற காய்கறிகளை விட பீன்ஸில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.

பீன்சை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. பீன்ஸ் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.

பீன்ஸ் இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். பீன்ஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் அற்புத மூலிகை நாயுருவி !!