திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் திருநீற்று பச்சிலை !!

திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயம் பொடி செய்து கலந்து தேய்த்துக் குளித்து வர கற்றாழை நாற்றம் மிகுந்த வியர்வை வருவது நீங்கும்.

திருநீற்றுப் பச்சிலையை அரைத்து சாறு பிழிந்து 15 மில்லி உள்ளுக்கு குடித்து வர கபம், மேல் மூச்சு, ஜன்னி போன்றவை குணமாகும். காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
 
திருநீற்றுப் பச்சிலை, கற்பூரவல்லி, மஞ்சள் கரிசாலை மிளகு, திப்பிலி இவற்றைச் சேர்த்து அரைத்து சிறு மாத்திரைகளாக்கி உட்கொண்டு வர தொண்டை சதை வளர்ச்சி கரையும்.
 
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வர புத்தி கூர்மை உண்டாகும். வாந்தியை நிறுத்தும். திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து மேலே பூசி வர கருந்தேமல், தடிப்பு, அரிப்பு ஆகியவை குணமாகும்.
 
திருநீற்றுப் பச்சிலைச்சாறு, தும்பை சாறு கலந்து சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி தலைபாரம் தீரும்.
 
திருநீற்றுப் பச்சிலை வேர், துளசி வேர், அவுரி வேர், மிளகு, சிற்றரத்தை, விஷ்ணுகிரந்தி, கண்டங்கத்தரி இவற்றை சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நறுக்கி நீர்விட்டுக் காய்ச்சி குடித்து வர எவ்வகையான சுரமும் குணமாகும்.
 
திருநீற்றுப் பச்சிலையுடன் பச்சை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிவர முகப்பரு, கரும் புள்ளிகள் நீங்கி முகம் மிருதுவடையும். திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து தலைவலி, தூக்கமின்மை குணமாகும். திருநீற்றுப்பச்சிலையை அரைத்து சிறு உருண்டையளவு உட்கொண்டு வர கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் உண்டாகும்.
 
அரிசியில் திருநீற்றுப்பச்சிலையைக் கலந்து சாதம் வடித்து 8 மணி நேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர 4 நாட்களில் உடல் சூடு தணியும்.