தோல் நோய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பிரமத்தண்டு !!

Written By Sasikala
Updated: திங்கள், 30 நவம்பர் 2020 (15:01 IST)

பல்லில் சீழ் வடிதல் குறைய: பிரம்மதண்டு இலைகளை எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கவும். பின்பு அந்த சாம்பலை எடுத்து தினமும் பல் தேய்த்து வந்தால்  பல்லில் சீழ் வடிதல் குறையும்.
 
தோல் நோய்கள் குறைய: பிரமத்தண்டு சமூலத்தை (பிரமத்தண்டு செடி) நன்கு காயவைத்து எரித்து சாம்பலாக்கி மீண்டும் சட்டியில் போட்டு எரித்து சலித்து உளுந்தம் பருப்பு அளவு சாம்பலை வெண்ணெயில் குழப்பி காலை வேளையில் மட்டும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குறையும்.
 
கண் நோய்கள் குறைய: பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள் எடுத்து ந‌ன்றாக‌க் கொதிக்க‌ வைத்து அதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.
 
பிரமத்தண்டு இலையை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.நுரையீரல் நோய் குறைய :பிரம்மதண்டு சமூலத்தை எரித்து சாம்பலை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சமூல சாம்பலில் 3 அரிசி எடை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் நோய்  குறையும்.
 
பிரமத்தண்டு சமூலச்சாறு 30 மி.லி. கொடுத்துக் கடிவாயில் அரைத்துக் கட்ட பாம்பு விடம் தீரும் பேதியாகும். உப்பில்லாப் பத்தியம் இருத்தல் வேண்டும்.
 
பிரமத்தண்டு இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை குணமடையும். உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments