வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆலிவ் ஆயிலில் ஊறவைத்த அத்திப்பழத்தின் பயன்கள் !!

ஆலிவ் ஆயிலில் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, வெளியேற்றப்படும்.

அத்திப்பழத்தில் பால் பொருட்களுக்கு இணையான அளவில் கால்சியம் உள்ளது. எனவே பால் பொருட்கள் சேராதவர்கள், அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால்,  கால்சியம் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 
தயாரிப்பு முறை: உலர்ந்த அத்திப்பழம் - 40 துண்டுகள், ஆலிவ் ஆயில். தயாரிக்கும் முறை: முதலில் உலர்ந்த அத்திப்பழத்தை ஒரு குடுவையில் போட்டு, அதில் ஆலிவ் ஆயிலை குடுவை முழுவதும் நிரப்ப வேண்டும். பின் அந்த குடுவையை மூடி வைத்து, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
 
பிறகு அந்த அத்திப்பழத்தை தினமும் உணவு உட்கொள்ளும் முன் சாப்பிட வேண்டும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இதனை தினமும் ஒன்று  சாப்பிட்டு வர, உடல் எடை குறைவது தூண்டப்படும்.
 
அத்திப்பழத்தில் பொட்டாசியம் வளமாக உள்ளது. இச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி, உடலின் இதர முக்கிய செயல்பாடுகளுக்கும் உதவும். மேலும் இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
 
ஆலிவ் ஆயிலில் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல், உயர் கொலஸ்ட்ரால், இரத்த சோகை, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.