வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....!!

தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. 


இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி. அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம்,  மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களைக் கொண்டிருக்கும்.
 
இவை சருமத்தின் pH நிலையை சமன் செய்கிறது. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
 
ரிபோஃப்ளேவின், ஃபைடோஜெனிக் அமிலம், தியாமின் போன்ற வைட்டமின்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். தேங்காய் நீரில் கால்சியம் சத்து  அதிகமாக உள்ளது. இதனால் எலும்புகள் திடமாகவும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 
தேங்காய் நீரில் அதிகமான அளவு பொட்டாசியம் உள்ளது. அதனால் இந்த நீரை பருகுவதால், சிறுநீரக கற்கள் கரைந்து விடுகின்றன. மேலும் மறுமுறை புதிய கற்கள் சேராமலும் இருப்பதையும் உறுதி செய்கின்றன.
 
தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து உடல் வறட்சி அடையாது. தேங்காய் நீர் பசி உணர்வை கட்டுப்படுத்தும் எனவே இதை எவ்வளவு குடித்தாலும் நம் உடலில் கொழுப்புகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும்.
 
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் தேங்காய் நீரை குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வாய்வு தொல்லைகள் வராது.
 
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் ஆற்றல் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.
 
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி காலையில் தேங்காய் நீர் குடித்து வந்தால், அது உடலின் எலெக்ரோ லைட்டுக்களை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
 
தேங்காய் நீரில் சர்க்கரையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதன் கலோரிகளும் குறைவாக உள்ளதால் நீரழிவு நோயாளிகளும் இதனை பயன்படுத்தி பலன்  அடையலாம்.