வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துமா...?

சுண்டைக்காய் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. மூலம் காரணமாக ஏற்படுகிற வலி, கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது சுண்டைக்காய். 

நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ, சி, இ போன்ற  சத்துக்களை அதிகம் உள்ளடக்கியது.
 
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச், கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த  சுண்டைக்காயில் உண்டு.
 
காய்ச்சல் இருக்கும்போது சுண்டைக்காயைச் சேர்த்துக் கொண்டால் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உண்டாகிற காயங்களையும் புண்களையும்  ஆற்றுகின்ற குணமும் சுண்டைக் காய்க்கு உண்டு. 
 
ஆஸ்துமா, வறட்டு இருமல், நாள்பட்ட நெஞ்சுச் சளி, போன்ற தொந்தரவுகள் இருக்கிறவர்களுக்கு சுண்டைக்காய் அருமருந்து. ரத்த சர்க்கரையின் அளவைக்  கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும். 
 
தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது. பார்வைத்திறன்  அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
 
வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய் போன்ற காய்களைக் கொண்டு காரக்குழம்பு, புளிக்குழம்பு செய்வது போலவே சுண்டைக்காயிலும் குழம்பு செய்யலாம்.  விருப்பப்பட்டால் குழம்பை இறக்குவதற்கு முன்பு அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் குழம்பின் சுவை மேம்படும். சுண்டைக்காய்  வற்றலிலும் குழம்பு சமைக்கலாம்.
 
இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு  சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
 
காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் ஆறவைக்கும்.
 
சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி தினம் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும்  குணமாகும்.