புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சர்க்கரைவள்ளி கிழங்கின் அற்புத மருத்துவ பயன்கள் !!

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள்  பூர்த்தியாகும்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். அப்படிப்பட்டவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆகியவை உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் உங்களை விரைவில் குணப்படுத்துகின்றன. 
 
பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் சேர்த்து சாப்பிடுவதால், அதில் இருக்கும் ஃபோலேட் எனப்படும் சத்து விரைவில் பெண்களுக்கு கரு உருவாதலை உறுதி செய்கிறது. 
 
சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது. இளமை தோற்றம் இளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. 
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.
 
புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்து இருக்கும் சத்துகள் புற்றுநோய் செல்களை மேலும் மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.