வியாழன், 13 மார்ச் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 மார்ச் 2025 (19:28 IST)

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

சைவ உணவினை விரும்பும் பலரும் சிக்கன் உண்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்த உணவாக இருக்கும்.

அத்துடன், தினமும் சிக்கன் சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால், உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து, எலும்புகள் மற்றும் மூட்டுகளில் பிரச்சனைகள் உருவாகலாம். மேலும், இதய நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், சிக்கன் உண்பதை தவிர்க்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிக்கன் என்பதை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது அதிகபட்சம் இரண்டு நாள் எடுத்து கொள்ளலாம் என்றும் தினமும் சிக்கன் சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கானது என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் காய்கரிகள், கீரைகள், பழங்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

Edited by Mahendran