செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ள சூரியகாந்தி எண்ணெய் !!

நம் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. இதன் காரணமாகவே சூரியகாந்தி விதையின் எண்ணெய் சமையலில் முக்கியப் பங்களிக்கிறது. 

சூரியகாந்தி விதையில் அதிக கொழுப்பு சத்துகள் இருக்கிறது. இந்த கொழுப்பு சத்து இதயத்தில் அடைப்பு உண்டாக்காது. 
 
சூரியகாந்தி விதையிலும், அதனுடைய எண்ணெய்யிலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இதனால் தான் சூரியகாந்தி எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
 
சூரியகாந்தி விதைகளில் அதிக நார்சத்து இருப்பதால், நமது ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மன அழுத்தத்தை உண்டாக்கக் கூடிய கார்டிசால் ஹார்மோனை குறைக்கிறது. மேலும் சூரியகாந்தி விதையில் புரத சத்து அதிகமாக இருக்கிறது.
 
இந்த எண்ணெயில் உள்ள ஓமெகா 6 பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். 
 
முகப்பருக்களை நீக்கி, சேதமடைந்த தோல்களை சரி செய்யும் தன்மை சூரியகாந்தி எண்ணெய் உண்டு. இது தவிர இதய பிரச்சனை மற்றும் அழற்சி போன்றவற்றை எதிர்த்து போராடும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
 
சூரியகாந்தி எண்ணெய்யில் வைட்டமின் இ அதிகமாக இருப்பதால், யு.வி. கதிர்களால் தசைச் செல்கள் பாதிப்படையாமல் காக்கும். நமக்கு ஏற்படும் தேவையற்ற  பதற்றத்தைக் குறைக்கும்.