1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (13:30 IST)

நரம்பு சுருட்டல் பிரச்சனைகளுக்கு நிவாரணம் சில மருத்துவ குறிப்புகள் !!

Varicose Veins
நரம்பு சுருட்டல் பாதிப்பு ஏற்பட்டால் பாதங்களில் அரிப்பு, வீக்கம் மற்றும் வலி அதிகமாக ஏற்படும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளப்படும் நிலை உருவாகும்.


வெரிக்கோஸ் வெயின் என்ற நரம்பு சுருட்டல் பாதிப்பு ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக தாக்குகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருந்தாலோ அல்லது உட்கார்ந்திருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு உருவாகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், ஒரே இடத்தில் இருப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், காவல் வேலை செய்பவர்கள் போன்றோர்க்கு இந்த நோய் தொற்றிக்கொள்ளுமாம். இந்த நோய் அதிகமான வலியை ஏற்படுத்தும்.

ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள், உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், வயது, ஜீன் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். நரம்பு சுருட்டலினால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.

குப்பைமேனி, நெருஞ்சில், வில்வம், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை அரைத்து நரம்புச்சுருட்டல் உள்ள இடத்தில் தடவி வந்தால் நரம்பு சுருட்டல் பாதிப்பு நிவாரணம் பெரும்.

துளசி, வசம்பு, மஞ்சள், சோற்றுக் கற்றாழை ஜெல் ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து, நரம்புச் சுருட்டலுக்கு மேல் தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்கள் தடவி வந்தால் நரம்புச்சுருட்டல் வலி குறையும்.