வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தலைவலிக்கு உடனடியாக பலன் கொடுக்கும் சில வைத்திய முறைகள்....!

தலைவலியைப் போக்க மாத்திரையை நாட வேண்டிய அவசியம் இல்லை. தலைவலியை இயற்கை முறையிலும் குணப்படுத்தலாம்.
சம அளவு இஞ்சிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது தலைவலியைக் குறைக்கும். இஞ்சி இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கும். சுக்குப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பத்து போடலாம்.
 
பெப்பெர்மிண்ட் எண்ணெயின் மணம் மூளையின் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. மூன்று துளி பெப்பெர்மிண்ட் எண்ணெயை ஒரு  டேபிள்ஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெயோடு கலந்து தலையிலும், பின்னங்கழுத்திலும் தடவி தலைவலியில் இருந்து விடைபெறலாம்.
 
இலவங்கப் பட்டையைப் பொடி செய்து நீர் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி குறையும். கிராம்புப் பொடியை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி சரியாகும். இரு துளி கிராம்பு எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயில்  கலந்து கடல் உப்பு சேர்த்து நெற்றியில் மிதமாக மசாஜ் செய்தால் தலைவலி சரியாகும்.
 
துளசி சிறந்த வலி நிவாரணி, நான்கு துளசி இலைகளை ஒரு கோப்பை கொதிக்கும் நீரில் போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் விடவும்.  பின்பு தேன் சேர்த்து அதனை அருந்தவும்.
 
தலைவலி வருவதற்கான அறிகுறி தெரிந்தால் பாதாம் பருப்பை சாப்பிடவும். தலைவலியைப் போக்குவதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் சைடர்  வினிகருக்கு முக்கிய பங்கு உள்ளது.
 
காலையில் தலைவலியால் அவதிப்பட்டால் ஆப்பிள் துண்டுகளை உப்புடன் சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்கவும், இது தலைவலிக்கு சிறந்த  மருந்து.
 
மக்னீசியம் குறைபாடு தலைவலியோடும், ஒற்றைத் தலைவலியோடும் நேரடித் தொடர்புள்ளது. பாதாம், எள், ஓட்ஸ், முந்திரி, முட்டை, பால், சூரியகாந்தி விதைகள், பிரேசில் நட்ஸ், பீனட் பட்டர் போன்றவை அதிக மக்னீசியம் கொண்டவை, எனவே இவற்றை உட்கொண்டால்  தலைவலிக்கு உடனடியாக பலனளிக்கும்.
 
தேன் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது, அதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோர் தினமும் காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் தேனை மிதமான சூட்டில் உள்ள நீருடனும், 2 டேபிள்ஸ்பூன் தேனை உணவு  உண்பதற்கு முன்பும் அருந்த வேண்டும்.