திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 27 ஆகஸ்ட் 2022 (12:21 IST)

முடி வளர்ச்சிக்கு துணைபுரியும் சில ஆரோக்கிய மருத்துவ குறிப்புக்கள் !!

Hair Growth
முடிக்கு ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். பளபளப்பான முடி, மென்மையான முடி, முடிக்கு ஈரப்பதம் வழங்குகிறது. முடி உடைப்பு, முடி சேதம் ஃப்ரீஸி ஹேர் போன்ற நிலையை தடுத்து ஆரோக்கியமான வலுவான உச்சந்தலையை அளிக்கிறது.


முடிக்கு ஹேர் மாஸ்க் என்பது சருமத்துக்கு பேக் செய்வது போன்ற பலனை தருகிறது. முடிக்கு மாஸ்க் சிகிச்சை செய்வது தீவிர முடி கண்டிஷனிங் செய்வது போன்று. இது முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கற்றாழையில் உள்ள சதைப்பிடிப்பான பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாதிரி ஜெல் மாதிரியான வழவழப்புத் தன்மை கொண்டது.இதனைத் தலை மற்றும் மயிர்க்கால்களில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்துக் கொள்ள வேண்டும். கற்றாழை தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவும். முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் குணம் செய்யும். மேலும் தலையில் உள்ள கிருமி தொற்றுகளை அழிக்கும் தன்மை கொண்டது.

முடி உதிர்வுக்கு' வெங்காயச் சாறு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்பட்டாலும், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயுடன் இணைந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கடாயில், தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல்லை நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு 2 ஸ்பூன் கலவையை எடுத்து அதில் நான்கு ஸ்பூன் வெங்காய சாறு சேர்க்கவும். தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன், இந்த கலவையை உச்சந்தலையில் தடவி, உங்கள் விரல் நுனியில் லேசாக மசாஜ் செய்யவும்.

பச்சை முட்டையைத் தலையில் தடவிக் கொண்டு, அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு தலையைச் சுத்தமாக அலச வேண்டும். முட்டையில் நிறைந்துள்ள சல்ஃபர், ஜிங்க், இரும்புச்சத்து , செலினியம், பாஸ்பரஸ், அயோடின் மற்றும் அதிக அளவு புரதச்சத்து முடி வளர்ச்சிக்குத் துணை புரியும். இந்த குறிப்பைத் தொடர்ந்து பின்பற்றி வரும் பொழுது முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.