Daily Horoscope
✕

அனைத்து வகையாக கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் எண்ணெய் தயாரிப்பு !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 8 ஜனவரி 2021 (19:05 IST)
 

தெவையான பொருட்கள்: கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய். கறிவேப்பிலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது தலைமுடியை ஈரப்பதத்துடன் வைப்பதோடு, இறந்த மயிர்கால்களை நீக்கி புத்துயிர் கொடுக்கிறது. அதில் உள்ள நிறைய அமினோ அமிலங்கள் நமது முடிக் கால்களை  வலுவாக்குகிறது. கூந்தல் உடைந்து போவதை தடுத்து ஆரோக்கியமான பளபளக்கும் கூந்தலை தருகிறது. 
 
தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்தது.இது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. அதனுடன் கறிவேப்பிலை  சேர்த்து தேய்க்கும் போது அதிலுள்ள விட்டமின் பி6 கூந்தலை வலிமையாக்குகிறது, கூந்தல் உதிர்தல், கூந்தல் பிளவு போன்றவற்றை தடுக்கிறது. 
 
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் - 100 மிலி, கறிவேப்பிலை - 2 கைப்பிடிகள். 
 
செய்முறை: ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் வைக்கவும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து 5-7 நிமிடம்  கொதிக்கவிட்டு இறக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு குளிர்விக்கவும். இப்பொழுது இதை வடிகட்டி ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து  கொள்ளுங்கள். 
 
நன்மைகள்: இந்த கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும் இளநரை வருவதை கட்டுப்படுத்தும்.

எல்லாம் காட்டு

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

அடுத்த கட்டுரையில்
Show comments