திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வயிற்றில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் அருகம்புல் சாறு...!!

அருகம்புல் வேர், இலை உட்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது.
உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.
 
சுத்தம் செய்த அருகம் புல்லை சிறிதளவு நீர் விட்டு இடித்துப் பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.
 
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து  வரவேண்டும்.
 
எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு  குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.
 
அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.