1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (12:32 IST)

உடலுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு அவல் !!

சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவதால் மிகவும் சத்து நிறைந்ததாக உள்ளது.

அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். 
 
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாக சமைத்து உண்ணலாம்.
 
சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிகப்பு அவல் இனிப்பு மிக பிரபலமானது. அதுபோல் சிகப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்து உண்ணப்படுகிறது.