நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ள தனியா !!
தனியாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ரைபோபிளேவின், நியாஸின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன.
தினமும் 150 மில்லி தண்ணீரில் 3 கிராம் தனியாவை போட்டு கொதிக்க வைத்து, பருகி வந்தால் ஆஸ்டியோபொரோசிஸ், எலும்பு மூட்டுகள் பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்கின்ற தன்மை தனியாவிற்கு அதிகமுள்ளது. நமது ரத்தத்தில் கால்சியம் அயனிகள் மற்றும் அசிட்டைல்கோலைன் வேதிப்பொருல்களை கலக்கச் செய்து உடலில் இருக்கும் மத்திய நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை ஆசுவாசப்படுத்தி, உடலில் ரத்த நாளங்களில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்துகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைவதோடு, இதயத் தசைகளில் உண்டாகும் அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படாமலும் காக்கிறது.
செரிமான உறுப்புகளில் இருக்கின்ற தீங்கு விளைவிக்கின்ற நுண்ணிய பாக்டீரியாக்களையும் தனியாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் அழிக்கிறது.
தனியாவில் அத்தியாவசிய எண்ணெய்கள், பாக்டீரியா வைரஸ் எதிர்ப்பு வேதிப்பொருட்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள், நச்சுத்தன்மையை நீக்குகின்ற அமிலங்கள், மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன.
தினமும் சிறிதளவு தனியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை பருகி வந்தால் மூட்டு வாதம், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.