புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (15:32 IST)

உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ள புளிச்சகீரை !!

புளிச்சகீரைக்கு புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் உண்டு.


புளிச்சகீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். புளிச்சகீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது.

புளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.

உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.

பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது.

புளிச்சகீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்சனை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும்.

மந்தம், இருமல், காய்ச்சல், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை ஒரு மிக சிறந்த தீர்வாகும்.