புதன், 6 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (17:54 IST)

பலவகையான சத்துக்கள் நிறைந்து காணப்படும் கிவி பழம் !!

கிவி பழங்கள் உடம்புக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, போலே மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்து உள்ளன.


இந்த கிவி பழம் இரத்தம் உறைவதை தடுக்கும். இந்த பழம் முக்கியமாக இதய பிரச்சினையை தடுக்கும். பழங்களில் சத்துக்கள் அதிகம் உள்ள பழம் கிவி பழம் ஆகும்.

கிவி பழத்தில் 9 வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. கிவி பழங்களை அதிகமாக வளரும் குழந்தைகள் சாப்பிட்டால் நோயின்றி ஆரோக்கியமாக வளருவார்கள். கிவி பழத்தில் அதிகமாக இரும்பு சத்துக்கள் உள்ளன.

உணவிற்கு பிறகு ஜீரண சக்திக்காக கிவி பழத்தை எடுத்துக் கொள்ளலாம். புற்றுநோய் வராமல் தடுக்கவும் இந்த பழம் பெரும் பங்கு வகிக்கிறது.

கிவி பழங்கள் சாப்பிடுவதால் பார்வை திறன் நன்றாக இருக்கும். நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமான திறனை   மேம்படுத்துகிறது.

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த கிவி பழத்தை சாப்பிட்டு வர விரைவில் ஆஸ்துமா குணமாகும். உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.