வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கோடைக் காலத்தில் குளிர்ச்சி தரும் தர்பூசணி பழம்....!

நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். உடல் சூடு தணியும்.
 
தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு பனிகட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல்  குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும்.
 
தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும்.
 
சிறுநீர்க் கற்களிலிருந்து இதன் விதைகள் நம்மைக் காக்கும். ஒரு டேபிள்ஸ்பூன் விதைகளை அரைத்து அதில் கொஞ்சம் வெந்நீரை ஊற்ற  வேண்டும். சூடு ஆறியதும் இதைக் குடிக்கலாம்.
பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.
 
தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.தர்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.
 
வைட்டமின் சி குறைபாட்டால் ஆஸ்துமா ஏற்படுகிறது. தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து  சாப்பிட்டுவர, ஆஸ்துமா பிரச்னை நெருங்காது.