வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

குடல் இயக்கத்தை சீராக்க உதவும் மாதுளை சாறு !!

மாதுளை சாற்றில் அதிக அளவு கரையக்கூடிய மற்றும் கரையாத உணவு நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் குடல் இயக்கத்தை சீராக்கவும்  உதவுகிறது. 

வைட்டமின் C மிகுந்துள்ள மாதுளைச்சாறு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையின் அறிகுறிகளை மேம்படுத்த உதவும்.
 
வைட்டமின் K மற்றும் ஃபோலேட் இரண்டிற்கும் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும் மாதுளை சாறு ரத்த உறைவைத் தடுப்பதோடு, ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது.
 
வயிற்றின் சீரான செயல்பாட்டில் நார்ச்சத்தானது, பசியைக் குறைக்க உதவுகிறது. இதில் கொழுப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், இது உங்கள் வயிறு மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிறந்த பானமாகிறது.
 
பெருங்குடல், நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் மாதுளை சாறுக்கு இருப்பதாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. 
 
மாதுளைப் பழச்சாற்றில் உள்ள அதிக அளவு பாலிபினோல் மற்றும் பிளவனாய்டுகள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய கலவையாக இருப்பதால் சிறந்த  மவுத் வாஷாக செயல்பட்டு வாய் துர்நாற்றத்தினை நீக்குகிறது
 
மாதுளைப் பழச்சாற்றினைத் தொடர்ந்து குடித்து வருவதால் பல் தகடு உருவாகுவது தடுக்கப்படுகிறது. பாக்டீரியாவினால் பற்களில் ஏற்படும் துவாரங்கள் மற்றும் ஈறு அழற்சியினை குணப்படுத்தவும் உதவுகிறது.
 
மாதுளையில் இனிப்புச்சுவை அதிகம் இருப்பதால், நீரிழிவு நோய், உயர்கொழுப்பு, ரத்த அழுத்தம் மற்றும் மனஅழுத்த நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மிதமாக எடுத்துக் கொள்வது நல்லது.