Daily Horoscope
✕

மிளகை எதனுடன் சாப்பிட எந்த நோய்கள் தீரும்...?

Updated: சனி, 17 நவம்பர் 2018 (16:38 IST)
 
* மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் உடனே நிற்கும். தேனுக்குப் பதில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
 
* சாதாரண ஜலதோசத்திற்கும் காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும்  கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
 
* 10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகைச் சேர்த்து 200 மி.லி நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் கோழை கட்டுதல் நீங்கும்.
 
* முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால்  நாளடைவில் உதிர்ந்துவிடும்.
 
* மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
 
* பல்வலி, சொத்தைப்பல், ஈறுவலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு மிளகுத்தூளும் உப்புத்தூளும் சேர்த்துப் பல் துலக்கினால் பலன் கிடைக்கும்.
 
* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு  வர குணமாகும்.

எல்லாம் காட்டு

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments