Daily Horoscope
✕

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் கம்பு !!

Written By Sasikala
Updated: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (13:22 IST)

கம்புவில் நார்சத்து உள்ளதால் அவர்கள் கம்பு பயிறு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசிஎடுக்காமல் இருக்கும், இதனால் அவர்களின் உடல் எடை குறையும்.
 
ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கும் கம்பு சாப்பிடலாம். முக்கிய சத்தான வைட்டமின் A வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பு பயிரில் உள்ளது.
 
கம்புவில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. ஒருவர் தினமும் கம்மங்கூழை குடித்து வந்தால், இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.
 
நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
 
கம்பு உணவை வழக்கமாக உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் வரக்கூடிய மார்பகப்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகாமல் பாதுகாக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments